January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் கட்டணம் 75 வீதத்தால் உயர்வு: நீர்க் கட்டணத்திலும் திருத்தம்!

Electricity Power Common Image

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் 75 வீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதல் 30 அலகுகளுக்கு 264 வீதத்தாலும், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 211 வீதத்தாலும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 125 வீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை 91 முதல் 120 அலகுகள் வரை 89 வீதத்தாலும், 121 முதல் 180 அலகுகள் வரையான மின் பாவனைக்கு 79 வீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நீர் கட்டணத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு விபரம்