January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேநீர், உணவுப் பொதி விலைகள் குறைப்பு!

உணவகங்களில் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி தேநீரின் விலையை 30 ரூபாவினாலும், சோற்றுப் பார்சல் விலையை 10 ரூபாவினாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்தமை ஆகிய காரணங்களினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையினால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்திருந்த நிலையிலேயே தற்போது அவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.