
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தமையை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்களினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மக்கள் முன்னெடுக்கும் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் இந்த அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.