January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவத் தலைமையகம் சென்ற ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பத்தரமுல்லை அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இராணுவத் தலைமையகம் சென்ற ஜனாதிபதி அங்கு அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.