January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜனாதிபதி பொய் பேசுகிறார்”

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுக்கான வாக்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து பொய்யானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கடந்த வாரம் சந்தித்த போது, அவர்களில் சிலர் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுமந்திரன், அது பொய்யான கூற்று என குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி பொய் பேசுகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் ஒருமனதாக டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.