இலங்கை முழுவதும் மேலும் 50 ‘ஐஓசி’ எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு எரிசக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
‘லங்கா ஐஓசி’ நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் குப்தா, இதனை கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி கூடிய விரைவில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேலும் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.