January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மே 28 ஆம் திகதி, கொழும்பு – இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், ஆகஸ்ட் 3 ஆம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவரின் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறான நிலைமையில் இன்றைய தினம் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.