ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்று அவரை சந்திப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகையில் பெரும்பாலான கட்சிகள் தனித் தனியே ஜனாதிபதியை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தாம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமரின் கீழான சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது.
எனினும் அது தொடர்பான கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அவரை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.