மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன்படி திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திறைசேரி, மின்சக்தி அமைச்சு, மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் நாளைய தினத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை அனுமதி கோரியுள்ள நிலையில், அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மின் கட்டணத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.