January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த யோசனை!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளுக்கமைய இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனைக்கு பாராளுமன்றத்தில் தங்களால் ஆதரவு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு அதனால் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இதனை நிறைவேற்ற தேவையான உதவிகளை தாங்கள் வழங்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.