January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசரகால சட்டத்தின் சில விடயங்களில் திருத்தம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழான அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழான சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.