January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய எல்லையில் கைதான 46 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த ஜுலை 21 ஆம் திகதி அவுஸ்திரேலியா எல்லையில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அதிகாரிகளின் கண்காணிப்பில் இவர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 1024 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

This slideshow requires JavaScript.