January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அடுத்துவரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவை”

twitter/ranil wickremesinghe

File photo

அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியை கடந்தே ஆக வேண்டும். இதனை கடக்க முடியாது என்று திரும்பி வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்ற போது, அந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியதத்துடன் தேவையான ஒப்பந்தங்களை செய்து இணக்கப்பாடுகளை எட்டி பயணிப்பதை தவிர மாற்று வழிகள் இருப்பதாக தான் கருதவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதர நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் எனினும் அடுத்து வரும் 6 மாதங்கள் கடினமானவை. அதனை கடந்தே ஆகவேண்டியுள்ளது. கடக்க முடியாது என்று திரும்பி வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.