ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கு கட்சிகள் பல இணக்கம் தெரிவித்துள்ளன.
கடந்த தினங்களாக தனித் தனியே அனைத்து கட்சிகளையும் சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றார்.
இதன்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இன்றைய தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவுக்குமாக இருந்தால் எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.