சிங்கபூரில் தற்போது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 11 ஆம் திகதி அவர் நாடு திரும்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து மாலைதீவு ஊடாக ஜுலை 14 ஆம் திகதி கோட்டாபய சிங்கபூர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டார்.
சாதாரண சுற்றுலா வீசாவிலேயே அவர் சிங்கபூர் வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் 14 நாட்கள் அவருக்கு வீசா வழங்கப்பட்டது, பின்னர் மேலும் 14 நாட்களுக்கு வீசா காலம் நீடிக்கப்பட்டது.
இதன்படி அவருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலுமே அங்கு தங்கியிருக்க முடியும். இதனால் அவர் அன்றைய தினத்தில் நாடு திரும்பலாம் என்று கூறப்படுகின்றது.
அவர் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதா? இல்லையா? என்பது குறித்து அவர் நாடு திரும்பிய பின்னர் அறிவிப்பார் என்று பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.