January 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தன!

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன.

பருப்பு, சீனி, உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைவடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி ஒரு கிலோ பருப்பு விலை 600 ரூபாவில் இருந்து 410 ரூபா வரையிலும், சீனி விலை 330 ரூபாவில் இருந்து 270 ரூபா வரையிலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உருளைக் கிழங்கு 215 ரூபாவில் இருந்து 150 ரூபா வரையிலும் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாவில் இருந்து 420 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று மேலும் சில உணவுப் பொருட்களின் மொத்த விலைகளும் குறைவடைந்துள்ளன.