February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்!

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை அவர் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்க மறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மே 28 ஆம் திகதி, கொழும்பு – இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.