January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துப்பாக்கிச் சூடுகள்: சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதம்!

நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படும் சடலங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அந்த சங்கம் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆங்காங்கே நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகள், காலி முகத்திடல் போன்ற முக்கிய இடங்களில் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றமை என்பன சட்டம் , ஒழுங்கிற்கு அச்சுறுத்துலானது என்று சட்டத்தரணிகள் சங்கம் அந்தக் கடிதத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபர்களை கைது செய்து, மக்கள் மத்தியில் உள்ள சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.