பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அண்மையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அனைத்துக் கட்டணங்களும் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண குறைப்புக்கமைய ஆரம்பக் கட்டணம் 48 ரூபாவில் இருந்து 44 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் டீசல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்ட போது பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.