January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வெளியேறுமாறு அறிவித்தல்!

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் அங்குள்ள கூடாரங்கள், தற்காலிக நிர்மானங்கள் ஆகியவற்றை அகற்றுமாறும் பொலிஸாரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸார், குறித்தப் பிரதேசம் அரச மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்றும், அதற்குரிய காணியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகள் சட்டவிரோதமானவை என்றும் அறிவித்துள்ளனர்.

இதனால் அங்கிருந்து அவற்றை அகற்றுமாறும், நாட்டில் உள்ள சட்டங்களை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.