January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடைக்கால வரவு செலவுத் திட்டம் 9 ஆம் திகதி சமர்ப்பிப்பு!

ஜனாதிபதியின் அரசாங்க கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாட்கள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்த விவாதத்தை நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 9 ஆம் திகதியும், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை 10 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையில் இன்று நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.