நாட்டை அபிவிருத்தி செய்யும் சர்வகட்சி வேலைத்திட்டங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் அழைப்பை தமது கட்சி ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம், பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களை மீள அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில கலந்துரையாட எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.