January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த ஒருவர் கைது!

Photo: Social media

ஜுலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

37, 35 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தெரணியாகலை பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.