அரசாங்கத்தினால் நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுலில் இருக்கும் நிலையில், அதில் காணப்படும் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை அதிகளவில் வழங்கக் கூடிய வகையில் 22 ஆவது திருத்தத்தை அரசாங்கம் தயாரித்துள்ள நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை ஏற்கனவே எதிர்க்கட்சியினரால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனையை கொண்டு வந்துள்ளது.
எனினும் அதில் காணப்படும் பல விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்பதனால் அவற்றை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் புதிய திருத்தம் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அது நிறைவேற்றப்படுமாக இருந்தால் அது 21 ஆவது திருத்தமாக அமுல்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
22 ஆவது திருத்த வரைபை இந்த இணைப்பில் வாசிக்கலாம்