சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகள் சிலவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மறறும் எதிர்ப்பார்ப்புடனும் உள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி இன்றைய தினம் மேலும் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.