நாட்டில் கொவிட் தொற்று அபாயம் மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை விடுத்தே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைகயில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதங்களில் குறைவடைந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் பரவும் குரங்கு அம்மை தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது நாட்டுக்குள் வருவதை தடுக்க வேலைத்திட்டஙங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.