பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய நிறுவனமொன்றிடம் இருந்து இலஞ்சம் கேட்டதாக தன் மீது எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் அவர் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி குழுவொன்றை அமைத்திருந்தார்.
அந்தக் குழு விசாரணை தொடர்பான அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. அதில் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் மீண்டும் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.