இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில். கொழும்பு மாநகர எல்லை பகுதிக்குள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாநகர எல்லைக்குள் பொது இடங்களில் நடமாடும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகர பிரதான சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரத்திற்குள் பணியாற்றுபவர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவனம் அணிய வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை சமூக இடை வெளியைப் பேணுதல் போன்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.