January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளராக சமன் ரத்னப்பிரிய நியமனம்!

பிரபல தொழிற்சங்க செயற்பாட்டாளரான சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக நியமமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 41(1) ஆம் இலக்க சரத்துக்கமை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் வேறு பல சிவில் அமைப்புகளிலும் சமன் ரத்னப்பிரிய பதவி வகிக்கின்றார்.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சில மாதங்கள் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.