வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் சட்டப்பூர்வமான முறையில் அதிகளவில் நாட்டுக்கு பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கென விசேட சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஜுன் 27 ஆம் திகதி அமைச்சரவை விசேட குழுவொன்றை அமைத்திருந்தது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் பணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் நாட்டுக்கு வரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைகளை வழங்குவதற்கும் மற்றும் இலத்திரனியல் கார் ஒன்றை வரிச் சலுகைகளில் கொள்வனவு செய்யவும் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.