
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் சுற்றுநிருபத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வீடுகளில் பயிர் செய்கைகளை முன்னெனடுக்கும் வகையில் அத்தியாவசியமில்ல அரச நிறுவனங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜுன் 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த சுற்றுநிருபத்தை இரத்துச் செய்து வழமைப் போன்று அரச நிறுவனங்களை வெள்ளிக்கிழமைகளில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.