File Photo
இலங்கையில் மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
களனி மற்றும் களுகங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் மண்சரிவு அபாயம் உள்ள மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.