February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வகட்சி அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும்”

தேசியப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த அரசாங்கத்திற்கு தாம் பூரண ஆதரவை வழங்குவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதியினால் நடத்தப்படவுள்ள மாநாட்டில் தாம் கலந்துகொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதன் ஊடாக நாட்டின் பொருளாததார, அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சம்பந்தன் கூறியுள்ளார்.