சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதியளவில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட 50 ரூபாவை விடவும் அதிகளவிலான விலையிலேயே எரிவாயு விலை குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது என்றும், 16 மாதங்களுக்கு தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியுமாக இருக்கும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.