
வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு பொருத்தமான நேரம் இதுவல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இந்த நேரத்தில் நாட்டுக்கு வந்தால் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்ற போதும், அவர் எப்போது வருவார் என்ற தகவல்கள் எதுவும் தனக்கு தெரியாது எனவும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார்.