எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும் இன்று நள்ளிரவு முதல் அதன் விலைகள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இதன்படி எரிபொருளின் விலைகள் 50 ரூபா முதல் 100 ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், அதற்கு ஏற்றால் போன்று விலைகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று முதல் நாடுமுழுவதும் எரிபொருள் பதிவு அட்டைக்கு அமையவே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.