File Photo
கொழும்பு காலிமுகத்தில் கடற்கரை பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அது யாருடையது என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வாரத்திலும் காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளமை மக்களிடையே அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் அண்மைக் காலமாக அதிகளவில் துப்பாக்கிச் சூட்டுசம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இவ்வாறான நிலைமையில் காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.