January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனக் கப்பலால் இலங்கை – இந்திய உறவு பாதிக்கப்படுமா?

சீனாவின் ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் இலங்கை வரவுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்தக் கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று இந்திய அதிகரிகாரின் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர்.

இதன்போது அந்தக் கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், கப்பலுக்கு இலங்கையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் ஆகஸ்ட் 11 மற்றும் 17 ஆம் திகதிக்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமது எதிர்ப்பையும் மீறி இலங்கை அந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இது இலங்கை – இந்தியவின் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.