ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கை முழுவதும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் அட்டை முறை (QR) அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகம் நடைபெறவுள்ளது.
இதன்போது எரிபொருள் கொள்வனவு செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி வாகன சாரதிகளின் நலன்கருதி எரிபொருள் நிரப்பு நிலையம் வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முகக்கவசம் அணியாது வருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.