November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எம்.பிக்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அதிகரிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி உறுப்பினர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா வரையில் எரிபொருள் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த ஜுன் மாதம் வரையில் பழைய எரிபொருள் விலைக்கு ஏற்றவாறே எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது அதன் விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் அந்தக் கொடுப்பனவை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அதிகரிப்புக்கமைய கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களில் உள்ள எம்.பிக்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா வரையிலும், அருகிலுள்ள எம்.பிக்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரையிலும் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.