May 29, 2025 20:55:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சித் தாவவுள்ள எம்.பிக்கள் பற்றி வெளியான தகவல்கள்!

புதிய பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தற்போது எதிர்க்கட்சி பக்கத்தில் இருக்கும் கட்சிகளை சேர்ந்த பலர் ஆளும் கட்சி பக்கத்தில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறாக ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஜோன் செனவிரட்ன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, ஜீவன் தொண்டமான், எஸ்.ராமேஸ்வரன், அசங்க நவரட்ண, சாமர சம்பத், ஜயரட்ன ஹேரத் ஆகியோர் ஆளும் கட்சி பக்கத்தில் அமரவுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த குமார் வெல்கம, கபீர் ஹாசீம், மயந்த திஸாநாயக்க, ஜே.சி.அலவதுவல, அஜித் மான்னபெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோரும் ஆளும் கட்சி பக்கம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது ஆளும் கட்சி பக்கத்தில் இருக்கும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, வசந்த யப்பா, டிலான் பெரேரா, திலக் ராஜபக்‌ஷ, உபுல் ஹலப்பதி, சரத் குமாரசிறி உள்ளிட்டோர் எதிர்க்கட்சி பக்கத்தில் அமரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.