பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள இலங்கையில் விபச்சார தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்தியாவின்ANI செய்திச் சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 22 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அந்த செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் ஆடைத் தொழிற்துறையில் பெருமளவான பெண்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும், இவ்வாறான நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள பெண்கள் பலர் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் குறித்த செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் விபச்சார தொழில் 30 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாகவும், இதனால் தற்காலிக விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விபச்சார தொழிலில் ஈடுபடும் சில பெண்களை சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களை அடிப்படயாகக் கொண்டே இந்த செய்தியை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.