சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு, கடன் நிலைத்தன்மை குறித்த உறுதியான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
ஆனால் இலங்கையின் அண்மைக்கால அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாத முன்னைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கை காரணமாக அந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளது.
இதனை நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்க தேவையான முதல் படி என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.