இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் எரிபொருள் பதிவு அட்டை (QR) முறையின் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அன்றைய தினத்தின் பின்னர், வாகன இறுதி இலக்க முறை, டோக்கன்கள் மற்றும் இதுவரை செயல்பாட்டில் உள்ள பிற முறைகள் எதுவும் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோதமாக எரிபொருளை பெற்றுக்கொள்பவர்கள், சட்டவிரோதமாக சேமித்து வைப்பவர்கள், விற்பனை செய்தவர்கள் அல்லது எரிபொருளை வழங்குவதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களின் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களை 0742 123 123 என்ற எண்ணுக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு தவறு செய்பவர்களின் பதிவு அட்டைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.