ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான வாரத்தில் மூன்று நாட்களே பாடசாலைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் வீடுகளில் இருந்தவாறு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது இணையம் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்வதனாலேயே கல்வி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எனினும் போக்குவரத்து பிரச்சனைகள் இல்லாத பிரதேச பாடசாலைகளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன் வலயக் கல்வி பணிப்பாளர்களின் அனுமதியுடன் புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளிலும் திறக்க முடியுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.