November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சர்வகட்சி அரசாங்கமே பிரச்சனைகளைத் தீர்க்க சிறந்த வழி”

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஆகும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அங்கு தலாதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

இதன்பின்னர் ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இதுவே தற்போதைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.