அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் கடந்த வாரங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய காரணத்தினால் அடுத்தத் தவணை விடுமுறை வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் இந்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.