கொழும்பிலுள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொலிஸார் இன்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகள் எதுவுமின்றி இரண்டு குழுக்கள் தமது அலுவலகத்தை சோதனையிட்டதாக அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
இவர்களில் சிவில் உடையில் வந்தவர்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதற்காக இவ்வாறு சோதனையிடுகின்றோம் என்ற கேள்விகளுக்கு வந்தவர்கள் பதிலெதனையும் வழங்கவில்லை என்றும், இது தங்களை அச்சுறுத்தும் செயற்படே என்றும் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.