கொழும்பின் சில பகுதிகளில் ஜுலை 30 திகதி இரவு முதல் 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி 30 ஆம் திகதி இரவு 9 மணி முதல் மறுநாள் முற்பகல் 8 மணி வரையில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அவசர திருத்தப்பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக் காலப்பகுதியில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.