இலங்கைக்கு புதிதாக நிதி உதவிகளை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை நிலவரம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டே உலக வங்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தாம் கவலையடைவதாக உலக வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முறையான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிதாக நிதியை வழங்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.